பீப் பாடல் விவகாரம் தொடர்பாக, நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை போலீசார் பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நடிகர் சிம்பு, கடந்த 2015ம் ஆண்டு பீப் சாங் என்ற பெயரில் பாடிய பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடல் பெண்கள் குறித்து ஆபாச வரிகள் இடம்பெற்றுள்ளதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண்கள் அமைப்புக்கள் போராட்டம் நடத்தின. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த புகாரின் அடிப்படையில் நடிகர் சிம்பு மீது கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தனக்கு எதிராக இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவை மாஸிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யபட்டது.
விசாரணையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் கோவை ரேஸ் கோர்ஸில் பதியபட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நடிகர் சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.