இஃப்தார் நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் பங்கேற்பு

இஃப்தார் நிகழ்ச்சி எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் கலந்து கொண்டார்.   ரமலான் மாதம் பிறை பார்க்கப்பட்டு தொடங்கி பத்து நோன்புகளை கடந்து விட்டது. இந்த மாதத்தில் முஸ்லிம்கள் அதிகாலை சூரியன்…

இஃப்தார் நிகழ்ச்சி எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் கலந்து கொண்டார்.

 

ரமலான் மாதம் பிறை பார்க்கப்பட்டு தொடங்கி பத்து நோன்புகளை கடந்து விட்டது. இந்த மாதத்தில் முஸ்லிம்கள் அதிகாலை சூரியன் வருவதற்கு முன்பே உணவுகளை சாப்பிட்டுவிட்டு மாலை சூரியன் மறைந்ததும் நோன்பு திறப்பது வழக்கம்.

இந்த நிலையில் இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் காயிதே மில்லத் பேரவையின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஏற்பாடி செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர்.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிலம்பரசன் கலந்து கொண்டு முஸ்லிம்களுடன் அமர்ந்து நோன்பை திறந்தார். இந்த நிகழ்வில் முஸ்லீம் லீக்கின் இளைஞர் பிரிவான முஸ்லீம் யூத் லீக்கின் மாநில பொதுச் செயலாளர் புரசைவாக்கம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.