முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் நடிகர் சாந்தனு!

நடிகர் சாந்தனு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகரும், மறைந்த இயக்குனர் பாக்யராஜின் மகனுமான சாந்தனு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு.

உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?

மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.

அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.