செய்திகள்

அரசியலில் நடிகர் சந்தானம்?

தமக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கும் எந்த கட்சிக்கும் தாம் செல்ல தயார் என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

ஜான்சன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், A1 படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஜான்சனுடன் இணைந்து, பாரிஸ் ஜெயராஜ் படத்தை எடுத்துள்ளதாக தெரிவித்தார். நகைச்சுவையே தமக்கு சரியான பாதையாக தெரிவதால், அந்த வகை படங்களிலேயே நடித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உதயநிதியுடன் சந்தானம் சில படங்களில் இணைந்து சந்தானம் நடித்துள்ள நிலையில், உதயநிதியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சந்தானம், உதயநிதியுடன் நடித்ததற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். தமக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கும் கட்சி எதுவாக இருந்தாலும், அந்த கட்சிக்கு தாம் செல்ல தயார் என சந்தானம் நகைச்சுவையாக கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: எருமை மாடுகளுடன் ஊர்வலம் சென்ற விவசாயிகள்!

Jeba Arul Robinson

குமரியில் விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல்

Gayathri Venkatesan

 வரதட்சனையை திருப்பிக் கொடுத்த மணமகன், குவியும் பாராட்டு

Gayathri Venkatesan

Leave a Reply