முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெயலலிதாவை புகழ்ந்த உதயநிதி!

ஜெயலலிதா தைரியமாக முடிவு எடுக்கக் கூடியவர் என்று தேர்தல் பரப்புரையில் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் தேனியைத் தவிர அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டினார். வரும் சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஜெயலலிதா தைரியமான முடிவு எடுக்கக் கூடியவர் என்ற அவர், அவருடைய உயிரிழப்பிலுள்ள மர்மத்தை கண்டுபிடிக்க திமுகவை வெற்றி பெற செய்யவேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் காத்திருப்பது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்

Gayathri Venkatesan

தமிழகத்தில் ஜன.19 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பு!

Saravana

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்

Gayathri Venkatesan

Leave a Reply