தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிறுநீரக பாதிப்பு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தற்போது காலமாகியுள்ளார். ரோபோ சங்கரின் திடீர் மறைவு தமிழ் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் ரோபோ ரோங்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில்,
“ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே”
என்று தெரிவித்துள்ளார்.







