முக்கியச் செய்திகள் தமிழகம்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லம் முன்பு கேக் வெட்டி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ரஜினியின் உருவம் பதித்த கேக்கை வெட்டி, உற்சாகமாக கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதேபோல் கரூர் மாவட்டத்தின் ரஜினி ரசிகர்கள் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் பிறந்தநாளையொட்டி கேக்வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். பொன் அமுதா திரையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 13 கிலோ கொண்ட கேக்கை வெட்டி ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விராட்கோலியை மிஸ் செய்கிறேன் – அனுஷ்கா சர்மா வெளியிட்ட புகைப்படம்

Dinesh A

தங்க முகக்கவசத்துடன் வலம் வரும் ‘தங்க பாபா’

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி

Halley Karthik