பாகிஸ்தானைக் கலக்கும் ரஜினிகாந்த் – சூப்பர் ஸ்டாரை நேரில் சந்திக்க விருப்பம்

நடிகர்  ரஜினிகாந்தைப் போலவே இருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், சூப்பர் ஸ்டாரை நேரில் சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகராக, ரசிகர்களால் ’சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கப்படும்…

நடிகர்  ரஜினிகாந்தைப் போலவே இருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், சூப்பர் ஸ்டாரை நேரில் சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகராக, ரசிகர்களால் ’சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். முன்னணி நடிகர்கள்கூட தனக்கு முன்மாதிரியாக நடிகர் ரஜினிகாந்த்தை கொள்ளும் அளவிற்கு சீரிய நடிப்பை வெளிப்படுத்தி வருபவர்.

தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும், ஏன் உலக அளவிலும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர். 50 வருடங்களாக திரையுலகில் பயணித்து வரும் இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு நபர் பாகிஸ்தான் நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவரது பெயர் ரெஹ்மெத் காஷ்கோரி. ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரியான இவர்,  நடிகர் ரஜினிகாந்த்தின் நடை, உடை, பாவனைகளை பின்பற்றி வருகிறார். இதுகுறித்து ரெஹ்மத் காஷ்கோரி கூறுகையில், “முதலில் நான் ரஜினிகாந்த் போல இருக்கிறேன் என்று கூற அனைவரும் தயக்கம் காட்டினர். பின்னர் ஃபேஸ்புக்கில் ஒருநாள் ஒருவர் நான் ரஜினிகாந்த் போல இருக்கிறேன் என்று கூறினார். அவரைப் போல நான் நடிப்பது இல்லை.

ஆனால் அனைவரும் என்னை ரஜினிகாந்த் போல இருக்கிறேன் என்று கூறுவதை நான் விரும்புகிறேன். நேரத்தை வீணடிக்காமல், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அவரோடு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று  விரும்புகிறேன்” என்றார்.

நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்ற இவரது விருப்பத்தை பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் ‘அண்ணன் ரஜினிகாந்த் பாகிஸ்தான் வர வேண்டும்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.