“தலைசிறந்த ஆல்ரவுண்டராக இந்திய அணியை உருவாக்கிய லெஜண்ட் ஜெய் ஷா” – #PrakashRaj விமர்சனம்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய் ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். ஐசிசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். அதோடு…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய் ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

ஐசிசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். அதோடு அவரது தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் வாயிலாக ஜெய் ஷா மிகக் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2019 ஆண்டு அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஆண்டு ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய்ஷா, செப்டம்பர் 1 ஆம் தேதி ஐசிசி தலைவராக பதவியேற்கவுள்ளார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நட்சத்திர வீரர் விராட் கோலியின் வாழ்த்து பதிவினை நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள் : கசிந்த #B.Ed., வினாத்தாள்…அதிரடியாக மாற்றப்பட்ட பதிவாளர்… நடந்தது என்ன?

இது தொடர்பாக அவர் பதிவிட்டதாவது:

“பேட்ஸ்மேனாக,  பவுலராக, விக்கெட் கீப்பராக மற்றும் தலைசிறந்த ஆல்ரவுண்டராக இந்திய அணியை உருவாக்கிய லெஜண்ட் ஜெய் ஷா. அவர் ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு நாம் அனைவரும் எழுந்து நின்று கைதட்டுவோம்”

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.