நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டு, பிரபல தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வித்யாசாகர், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனையால் சில காலமாக அவதிப்பட்டு வந்துள்ளார். வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘மும்பை கட்டட விபத்து – பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு’
ஆனாலும், நுரையீரல் செயல்படாமல் இருந்ததால் எக்மோ சிகிச்சையிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இறப்பு கொரோனா தொற்றினால் அல்ல, புறாக்கள் எச்சத்தினால் பரவும் ஒரு வித தொற்று அவரின் நுரையீரல்கள் இரண்டையும் பாதித்திருந்தது. இதனால், அவரின் நுரையீரலை மாற்ற வேண்டிய நிலை இருந்தது. பின்னர் அவருக்கு இருந்த தொற்று குணமானபோதும், நுரையீரல் செயல் முற்றிலும் செயல் இழந்து எக்மோ சிகிச்சையிலிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.








