‘டிராகன்’ படத்தில் இணைந்தநடிகர் மரியம் ஜார்ஜ், நடிகை இந்துமதி -போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு!

‘டிராகன்’ படத்தில் நடிகர் மரியம் ஜார்ஜ், நடிகை இந்துமதி நடித்து வருவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் மிகப்பெரிய…

‘டிராகன்’ படத்தில் நடிகர் மரியம் ஜார்ஜ், நடிகை இந்துமதி நடித்து வருவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து ‘லவ் டுடே’ திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற திரைப்படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் கதாபாத்திர அறிமுக புகைப்படங்களை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : டி20 போட்டி | இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

அதன்படி, நேற்று மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கே. எஸ். ரவிகுமார் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ஜார்ஜ் மரியன் மற்றும் இந்துமதி புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில், ஜார்ஜ் மரியன் ‘தனபால்’ என்ற பாத்திரத்திலும், இந்துமதி ‘சித்ரா’ என்ற பாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.