நடிகர் மம்முட்டி நடிக்கும் பிரம்மயுகம் படப்பிடிப்பு : லேட்டஸ்ட் அப்பேட்!

நடிகர் மம்முட்டி நடிக்கும் பிரம்மயுகம் படத்தில் அவருக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது! நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் பேனர் ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களை மட்டுமே தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் ஆகும். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும்…

நடிகர் மம்முட்டி நடிக்கும் பிரம்மயுகம் படத்தில் அவருக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது!

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் பேனர் ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களை மட்டுமே தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் தயாரிக்கும் பிரம்மயுகம் படத்தில் நடிகர் மம்முட்டி நடிக்கிறார். ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக ஷெஹ்னாத் ஜலால், தயாரிப்பு வடிவமைப்பாளராக ஜோதிஷ் சங்கர், எடிட்டராக ஷபீக் முகமது அலி பணிபுரிகின்றனர்.

கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இதன் படப்பபிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி கொச்சி & ஒட்டப்பாலத்தில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கான போர்ஷன் நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.மீதமுள்ள ஷெட்யூல் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சித்தார்த்பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோருடன் தொடரும். மொத்த படப்பிடிப்பும் அக்டோபர் நடுப்பகுதியில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.