புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.
வரும் 22ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேவசம் போர்டு ஆலோசித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும் என தெரிகிறது.







