நடிகர் சிம்புவின் பிறந்தநாள்… போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன்!

சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டம்.. போஸ்டர் வெளியிட்டு நடிகர் கமல் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. நடிகர் சிம்புவின் சமீபத்திய படமான “பத்து தல” படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த…

சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டம்.. போஸ்டர் வெளியிட்டு நடிகர் கமல் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் சிம்புவின் சமீபத்திய படமான “பத்து தல” படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தை துல்கர் சல்மான், ரிது வர்மா மற்றும் ரக்‌ஷன் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். நடிகர் கமல்ஹாசனின் ”ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்” தயாரிக்க உள்ளது.

சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாக இருப்பதாகவும், சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும், முற்றிலும் வித்தியாசமான இருவேடங்களில் சிம்பு நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த STR 48 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ், குதிரையேற்றம் உள்ளிட்ட பல பயிற்சிகளை வெளிநாட்டில் மேற்கொண்டு வந்த சிம்பு, படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

நாளைய தினம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படம் டிராப் ஆகிவிட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், படத்தின் அப்டேட் இன்று (பிப். 2) வெளியாகவுள்ளதாக ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

அதன்படி, படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, கமல்ஹாசன் நடிகர் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “அன்புத் தம்பி சிலம்பரசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார். இந்த பதிவினை ராஜ்கமல் நிறுவனம் ஷேர் செய்து, “வீரத்தை கட்டவிழ்த்துவிட்டு, சிம்பு 48 படத்தின் அற்புதமான பயணத்திற்கு சாட்சியாக இருங்கள். பிறந்தநாள் வாழ்த்துகள் சிலம்பரசன்” என பகிர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.