என்னதானாச்சு டி.ராஜேந்தருக்கு?

இருதயப் பிரச்சனை காரணமாக நடிகர் டி.ராஜேந்தர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

இருதயப் பிரச்சனை காரணமாக நடிகர் டி.ராஜேந்தர் போரூரில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திரைப்பட நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு
வயிற்று வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அவருக்கு திடீரென இருதயம் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் டி.ராஜேந்தர் தொடர்
சிகிச்சை பெற்று வருகிறார் . இந்த நிலையில் அவரது மகன் நடிகர் சிம்பு
மருத்துவமனைக்கு நாளை வந்து தந்தையை நேரில் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிய உள்ளதாகத் தகவல் வெளியானது.

மேலும், மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு டி.ராஜேந்தர் அழைத்துச்
செல்லப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் மருத்துவமனை வட்டாரங்கள் தற்போது அதுகுறித்த தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.