விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க தனுஷுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ விஜய் குரலில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தின் கடைசி காட்சியில் ‘ரோலெக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடித்தது போலவே, லியோ படத்திலும் சிறப்புத் தோற்றம் ஒன்று இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக லியோ படக்குழுவினர் நடிகர் தனுஷுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் தனுஷ் மொட்டையடித்திருப்பதும், இதற்காக இருக்கலாம் என தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது.
ஏற்கெனவே, பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யாப் படத்தில் இணைந்துள்ளதாவும், அவரின் காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.