ராஜ்குமார் ஹிரானியுடன் மீண்டும் கை கோர்க்கும் அமீர்கான்!

நடிகர் அமீர்கானும் இயக்குநரும், தயாரிப்பாளருமான  ராஜ்குமார் ஹிரானியும் புதிய படம் ஒன்றில் இணைகின்றனர்.   கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிகே படத்தில் அமீர்கானும் ராஜ்குமார் ஹிரானியும் இணைந்து பணியாற்றினர். அதே போல் 2009ஆம் ஆண்டு…

நடிகர் அமீர்கானும் இயக்குநரும், தயாரிப்பாளருமான  ராஜ்குமார் ஹிரானியும் புதிய படம் ஒன்றில் இணைகின்றனர்.  
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிகே படத்தில் அமீர்கானும் ராஜ்குமார் ஹிரானியும் இணைந்து பணியாற்றினர். அதே போல் 2009ஆம் ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான 3  இடியட்ஸ் படத்திலும் இந்த கூட்டணி இணைந்து கலக்கியது. இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்குமார் ஹிரானியின் படத்தில் அமீர் கான் நடிக்க உள்ளார்.
அண்மையில் அமீர்கானை சந்தித்த  ராஜ்குமார் ஹிரானி வாழ்க்கை வரலாறு குறித்த கதை ஒன்றை கூறியதாகவும், அதனை கேட்டு உற்சாகம் அடைந்த அமீர்கான் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
ஷாருக்கான் நடிக்கும் டுங்கி திரைப்படத்தில் ராஜ்குமார் ஹிரானி பிசியாக உள்ளார்.  இந்த படம் வெளியான பிறகு அமீர்கான் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அமீர் கான் மற்றும் கரீனா கபூர் நடித்த லால் சிங் சத்தா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.