திருப்பதியில் தரிசனம் செய்த நடிகர் தனுஷ் – இணையத்தில் தீயாக பரவும் மாஸ் லுக்!

நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்தார், அவரது புது லுக் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் தனுஷ் தற்போது ராக்கி, சாணிக் காயிதம் போன்ற அழுத்தமான…

நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்தார், அவரது புது லுக் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் தனுஷ் தற்போது ராக்கி, சாணிக் காயிதம் போன்ற அழுத்தமான படங்களை கொடுத்துள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் ரிலீஸ் தீபாவளியையொட்டி இருக்கும் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சில தடங்கல்கள் காரணமாக தற்போது படத்தின் ரிலீஸ் டிசம்பருக்கு தள்ளிப்போயுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டானது.

Image

கேப்டன் மில்லர் திரைப்படம் மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது . இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் நீண்ட, தாடி, மீசை மற்றும் தலைமுடியுடன் கடந்த சில மாதங்களாக காணப்பட்டார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய டி50 படத்திலும் தனுஷ் கவனம்  செலுத்தவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி  நடிக்கவுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் திருப்பதியில் தனது குடும்பத்துடன் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்துள்ளார். நீண்ட தாடி, தலைமுடியுடன் காணப்பட்ட தனுஷ், தற்போது மொட்டையடித்து க்ளீன் ஷேவ் செய்து காணப்படுகிறார். டி50 படத்தில் அவரது லுக் இப்படித்தான் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது, அந்தக் கெட்டப்புடன் அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் தனுஷ் உடன் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவும் மொட்டையடித்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.