ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் “தி கிரே மேன்” படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் தனுஷ், இந்தியா வர உள்ள நிலையில் அடுத்து டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா. தேசிய விருது பெற்ற இவர், டாலர் ட்ரீம்ஸ், ஹேப்பிடேஸ், ராணா நடித்த லீடர், நயன்தாரா நடித்த அனாமிகா உட்பட பல படங்களை இயக்கியவர். டாலர் ட்ரீம்ஸ் என்ற தனது முதல் படத்துக்காக தேசிய விருது பெற்ற இவர்,
அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. இதை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் மூலம், நடிகர் தனுஷ் நேரடி, தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.
தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ” நான் ரசிக்கும் இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலாவுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்து, சேகர் கம்முலாவும் தனது ட்விட்டேர்
பக்கத்தில் “தனது நடிப்பின் நோக்கத்தையும் செயல் திறனையும் அறிந்து நடிப்பவர் நடிகர் தனுஷ்
“என்று குறிப்பிட்டுள்ளார்.







