#TamilCinema நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்!

தமிழ் திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் உடல் நலக்குறைவால் காலமானார்.  யூடியூப் சேனல்கள் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் பிஜிலி ரமேஷ். இவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “நட்பே துணை” படத்தில்…

Actor Bijili Ramesh passed away due to ill health!

தமிழ் திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் உடல் நலக்குறைவால் காலமானார். 

யூடியூப் சேனல்கள் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் பிஜிலி ரமேஷ். இவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “நட்பே துணை” படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதனைத்தொடர்ந்து ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம், அமலாபால் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

குடித்துவிட்டு சாலையில் பிராங்க் வீடியோ செய்வதால் பிரபலமான பிஜிலி ரமேஷ் சினிமா வாய்ப்பு கிடைத்தும் அந்த பழக்கத்தை நிறுத்தவில்லை. இதனால் அவருக்கு படவாய்ப்புகள் பறிபோனதோடு, உடல்நலனும் குன்றியது. இந்நிலையில் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். இது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.