முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

நடிகர் அஜித் செய்த உதவி- பைக் பயணியின் நெகிழ்ச்சிப் பதிவு!

அஜீத் தனது பயணித்தின் போது வழியில், மஞ்சு கஷ்யப்பா என்பவரின் பைக் பழுதடைந்து நிற்கவே, அதனை கண்டு அவரின் பைக்கை எந்த தயக்கமும் இன்றி சரிசெய்து தந்துள்ளார் நடிகர் அஜித்.

பைக்குகள் மற்றும் பைக் ரைடுகளின் மீது அஜீத் குமாருக்கு இருக்கும் ஈர்ப்பு ஒரு முடிவற்ற கதையாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் விளைவாக அவ்வப்போது தனது பைக்கை எடுத்துக்கொண்டு எங்காவது பயணம் மேற்கொள்வார். அப்படி அவர் செல்லும் பயணங்களின் போது அவர் ரசிகர்களால் அவரின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாவதும் வழக்கம்.

இந்நிலையில் அஜீத் குமார் தனது பைக்கர் நண்பர்களுடன் லடாக் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அப்படி அவர் இமாலய மலைப் பகுதியில் பயணம் மேற்கொள்ளும் போது, வழியில் அவரைப் போன்ற பைக் பயணியான மஞ்சு கஷ்யப்பா என்பவரின் பைக் பழுதடைந்து நிற்கவே, அதனை கண்டு அவரின் பைக்கை எந்த தயக்கமும் இன்றி சரிசெய்து தந்துள்ளார் நடிகர் அஜித். மேலும் ஒன்றாக டீ குடித்துவிட்டு அவர்களை  வழியனுப்பியுள்ளார்.

இதை மஞ்சு கஷ்யப்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் “ நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கும், முதன்முறையாக என் பைக் பயணத்தில் எனது பைக் டயர் பழுதடைந்து நின்றது, நான் உதவியைத் தேடிக்கொண்டிருந்தேன், அப்போது
எனது கனவு பைக்கான bmw 1250GSA ஒன்று கடந்து சென்றது, நான் அவரை கைகாட்டி நிறுத்தினேன்.

பின் அவரிடம் ஏர் கம்ப்ரஸரைக் கேட்டேன், இருக்கிறது என்று அவர் கூறினார். பின் நான் அவரிடம் பைக்கைப் பற்றி கொஞ்சம் பேசினேன், அவர் எங்களிடம் உங்கள் பெயர் என்ன, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். பின்னர் அவர் ஹாய் நான் அஜித் என்று அறிமுகப்படுத்தினார். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறியதோடு, அவரே அதைச் சரி செய்ய உதவினார், இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் சவாரியைத் தொடங்கினோம்.

நான் அவரிடம் மீண்டும் ஒரு உதவி கேட்டேன், ஐயா உங்களுடன் ஒரு டீ சாப்பிடுவது ஒரு பாக்கியம் என்றேன். அடுத்த தேநீர்க்கடையில் 10 நிமிடங்களுக்கு மேல் அவரது முந்தைய ரூட் மோப்பைப் பற்றி உரையாடியதோடு எங்கள் பயணத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தெரிவித்துச் சென்றார்.

நான் முழுக்கதையையும் பதிவிட்டதற்குக் காரணம் இரண்டு விஷயங்கள்
1. ஒரு மிகப் பெரிய ஆளுமையாக இருக்கும் ஒரு மனிதன் எந்த மமதையும் இல்லாமல் அவனுடைய ரசிகர்கள் மற்றும் மக்கள் மீது அந்த அற்புதமான அன்பைக் கொண்டிருக்கிறான்.
2. எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது, இந்த நாளை என்னால் மறக்க முடியாது, அவர் எனது பார்வையை முற்றிலும் மாற்றினார்” என நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆகஸ்ட் 15 முதல் 5ஜி சேவையை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ

Web Editor

7 நாளில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம்: தொடங்கிவைத்த கமல்ஹாசன்

EZHILARASAN D

அரசுப்பள்ளி பெண் ஊழியர் கொலை முயற்சி

Halley Karthik