பைக் ட்ரிப்பின் போது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்த நடிகர் அஜித்… வீடியோ வைரல்!

பைக் ட்ரிப்பின் போது தன்னுடன் வந்த சக நண்பர்களுக்கு நடிகர் அஜித்குமார் தன் கையால் பிரியாணி சமைத்துக் கொடுத்துள்ளார்.  அவர் பிரியாணி சமைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் திரையுலகில் முன்னணி…

பைக் ட்ரிப்பின் போது தன்னுடன் வந்த சக நண்பர்களுக்கு நடிகர் அஜித்குமார் தன் கையால் பிரியாணி சமைத்துக் கொடுத்துள்ளார்.  அவர் பிரியாணி சமைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இவர் கைவசம் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன.  இதில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.  இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.

அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  வருகிற ஜூன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.  சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவர் பைக் ரைடில் ஆர்வம் கொண்டனர்.   சினிமாவில் நடிக்க துவங்கிய போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் பைக் ரைடு செய்து வந்தார்.  சில சமயம் அதில் அடிப்பட்டு சிகிச்சையும் எடுத்திருக்கிறார்.  முதுகில் சில அறுவை சிகிச்சைகளையும் செய்து கொண்டார்.

தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் நண்பர்களுடன் பைக்கில் சுற்றுலா கிளம்பி விடுவார்.   அதன்படி தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தாமதமாகி வருவதால், அந்த கேப்பில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பைக் ட்ரிப் மேற்கொண்டு வருகிறார் நடிகர் அஜித்குமார்.

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நடிகர் ஆரவ்வும் அஜித்துடன் சென்று இருக்கிறார்.  பைக் ரைடு சென்ற இடத்தில் பைக் ரைடர்களுக்கு நடிகர் அஜித்குமார் டிப்ஸ் கொடுக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.  இந்த பைக் ட்ரிப்பின் போது தன்னுடன் வந்த சக நண்பர்களுக்கு நடிகர் அஜித்குமார் தன் கையால் பிரியாணி சமைத்துக் கொடுத்துள்ளார்.  அவர் பிரியாணி சமைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.