புதுச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 100 % நிதி உதவி வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள தனியார் பள்ளியின் 175-வது ஆண்டு
தொடக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டார், அப்போது விழாவில் பேசிய
அவர், தரமான, நல்ல கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம் என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதுச்சேரியில் ஆரம்பம் முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக மாணவர்களுக்கு
கல்வி வழங்கி வரும் நிலையில் மாணவர்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி
வருகிறது என்றார்.
மேலும் மாணவர்களுக்கான உயர் கல்விக்கான தொகையை அரசே செலுத்தி வருகிறது என்றும் தெரிவித்த அவர் புதுச்சேரியில் உள்ள ஆரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 95% நிதி வழங்கி வரும் நிலையில் 100% முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.