ஜி 20 மாநாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக சென்னையில் 3 நாட்கள் முதலாவது கல்விக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜி 20 மாநாடு முன்னேற்பாடுகள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல பிரதமர் மோடி இந்த வாய்ப்பை பயன்படுத்துவார் என உறுதியாக நம்புவதாக தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.
ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 2022 முதல் நவம்பர் 2023 வரை 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகள் நாட்டின் 56 நகரங்களில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களில் நிகழ்வுகளை நடத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் ஜனவரி 31 – பிப்ரவரி 02 வரை முதலாவது கல்விக் குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்துகொள்ளும் வெளிநட்டைச்சேர்ந்த பிரதிநிதிகள் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.