திருச்செந்தூர் அருகே, உள்ளாட்சி தேர்தலின் போது சத்திய பிரமாண
பத்திரத்தில், சிறை தண்டனையை குறைத்து காண்பித்ததால் ஊராட்சி
மன்ற துணைத் தலைவர் பதவியை பறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி ஊராட்சியில்
உள்ளாட்சி தேர்தலில், அப் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ராஜேஷ் என்பவர் 7-வது
வார்டில் போட்டியிட்டு, வார்டு உறுப்பினராக வெற்றிபெற்று துணைத்தலைவராக
பதவி வகித்து வந்தார். மேலும், ராஜேஷ் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல்
செய்த பிரமாண பத்திரத்தில், கொலை வழக்கில் அனுபவித்த 7 ஆண்டு சிறை
தண்டனையை 2 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து நாலுமாவடியை சேர்ந்த அழகேசன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற
மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி,
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கும்படி, ஊரக வளர்ச்சித்
துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, தேர்தல் ஆணையம்
ஒப்புதல் பெற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நாலுமாவடி ஊராட்சியில்
ராஜேஷின் 7-வது வார்டு உறுப்பினர் பதவியை பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி திமுக பிரமுகரின் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கு. பாலமுருகன்