முக்கியச் செய்திகள் தமிழகம் வணிகம்

வணிக வரியில் ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை : அமைச்சர் மூர்த்தி

வணிக வரி விஷயத்தில் ஏமாற்றுபவர்களை உரிய தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து
நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை மீதான மானியக்
கோரிக்கையில் பதிலளித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, வணிகர் நல வாரியத்தில் உள்ள
உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளுடன் கூடுதலாக
திருமண உதவித்தொகை மற்றும் விபத்துக் கால இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனத்
தெரிவித்தார். வணிக நல வாரியம் பெயரில் போலி பட்டியல் தயாரிப்பவர்களின் மீது குண்டர் சட்டம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வணிவரி துறையில் 7 புதிய நிர்வாகக் கோட்டம் அமைக்கப்படும் எனவும், வணிக வரி
விஷயத்தில் ஏமாற்றுபவர்களை உரிய தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிய ரோந்து வாகனங்கள் மூலம் சரக்கு வணிக போக்குவரத்தினை கண்காணிக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். அனைத்து சார்பதிவாளர் அலுவலக ங்களிலும் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக இணைய நெறிமுறை புகைப்படக் கருவிகள் 5.98 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் எனத் தெரிவித்தார்.

ஆவண எழுத்தர் நல நிதியத்தை முழுமையாக செயல்படுத்தி நிதியத்தின் உறுப்பினர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும், வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்கள் ஒரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமையும் வகையில் சீர மைக்கப்படும் என்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகர் ரஜினியுடன் லெஜெண்ட் சரவணன் – வைரலாகும் புகைப்படம்

Dinesh A

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்து வருகிறது – அமைச்சர் விளக்கம்

Web Editor

மதவெறி கும்பல் நடத்தும் வன்முறை அதிர்ச்சியளிக்கிறது ; சீமான்

G SaravanaKumar