100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான மதிப்பிழப்பு Google நிறுவனத்திற்கு ஏற்பட்டதால். AI Chatbot கருவியை மேம்படுத்த தினமும் இரண்டு முதல் நான்கு மணி நேரம் செலவிடுமாறு ஊழியர்களிடம் சுந்தர் பிச்சை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
டெக்னாலஜி உலகில் இப்போது மக்கள் அதிகம் பேசுவது OpenAI நிறுவனத்தின் ChatGPT AI கருவியை பற்றி தான். இந்த கருவி செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயலியாகும். இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்களை போலவே பதில் அளிப்பதோடு, மனிதர்களை போலவே சிந்திக்கும் திறனையும் பெற்றுள்ளது.
Microsoft நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கி வரும் இந்த OpenAi நிறுவனத்தின் ChatGPT கருவி தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இப்படியே சென்றால் Google நிறுவனத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக இந்த ChatGPT கருவி அமைந்து விடும் என பல வல்லுநர்கள் எண்ணுகின்றனர். காரணம், விரைவில் Google Search எனப்படும் தேடல் கருவியை பின்னுக்கு தள்ளும் விதமாக Microsoft அதன் தேடல் கருவியான Bing உள்ளே இந்த ChatGPT கருவியை இணைக்கவுள்ளதால் தான்.
இதனால் அதிர்ந்து போன Google நிறுவனமோ ChatGPTக்கு போட்டியாக AI Chatbot என்ற கருவியை தயாரித்து தற்போது சோதனையில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சோதனை பயன்பாட்டில் இருந்த சமயத்தில் மக்கள் கேட்ட கேள்விக்கு தவறான பதில்களை AI Chatbot அளித்ததால் மிக பெரிய பின்னடைவை Google நிறுவனம் சந்தித்துள்ளது.
இதனால் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி Nasdaq சந்தையில் 7.8 % மதிப்புகளை
கூகுள் நிறுவனம் இழந்துள்ளது. இது கிட்டத்தட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான மதிப்பு என கூறப்படுகிறது. இதனால் அதிரடி முடிவெடுத்த கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் தேடலில் ஒருங்கிணைக்கப்படவுள்ள AI Chatbot-ஐ மேம்படுத்த தினமும் இரண்டு முதல் நான்கு மணி நேரம் செலவிடுமாறு ஊழியர்களை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் சுந்தர் பிச்சை தன் ஊழியர்களுக்கு அனுப்பியிருந்த இமெயிலில் “இப்போது நாம் செய்யக் கூடிய மிக முக்கியமான விஷயம், ஒரு சிறந்த தயாரிப்பை உருவாக்குவதிலும் அதை பொறுப்புடன் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதே ஆகும். இந்த AI-ஐ உருவாக்க பல மாதங்கள், பல ஆண்டுகள் சிரமப்பட்டுள்ளோம், இப்போது அது மீண்டும் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. இந்த AI-ஐ மையப்படுத்திய இந்நிறுவனத்தை முதன்மையான இடத்திற்கு கொண்டு வர நாங்கள் பல ஆண்டுகளாக உழைக்கிறோம், அதை நிறைவேற்ற மீண்டும் தயாராக இருக்கிறோம்” என்று எழுதி இருந்தாராம்.
- பி. ஜேம்ஸ் லிசா









