முக்கியச் செய்திகள் உலகம்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து: சவூதி அரேபியா கண்டனம்

குவைத், கத்தார் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சவூதி அரேபியா அரசும் பாஜக செய்தித்தொடர்பாளர்களின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தது.

முஸ்லிம்கள் இறைத்தூதராகக் கருதும் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக புகார் எழுந்ததை அடுத்து, பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நுபுர் சர்மாவும், நவீன் குமார் ஜிண்டாலும் தங்களது கருத்துக்கு மன்னிப்பு கோரினர்.

பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். ஞானவாபி மசூதி தொடர்பான விவாதத்தின் போது முகமது நபிகள் குறித்து சர்ச்சையான முறையில் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதேபோல் டெல்லி பாஜக செய்தித்தொடர்பாளரான நவீன் ஜிண்டாலும் முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை டுவிட்டரில் பதிவு செய்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, ஈரான், கத்தார், குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் இந்தக் கருத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், முஸ்லிம்கள் சிலரும் இவர்களுக்கு எதிராக புகார் அளித்தனர். இதையடுத்து, கட்சி மேலிடம் இவர்கள் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்துள்ள பாஜக மேலிடம், நவீன் குமார் ஜிண்டாலை கட்சியை விட்டே நீக்கிவிட்டது.

இதுதொடர்பாக பாஜக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “அனைத்து மதங்களையும் கட்சி மதிக்கிறது. எந்தவொரு மதத்துக்கு எதிராகவும், எந்தவொரு மதத் தலைவருக்கு எதிராகவும் தெரிவிக்கப்படும் கருத்தை கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. பாஜகவின் கட்சி விதி 10 (ஏ) வை நீங்கள் இருவரும் (நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால்) மீறிவிட்டீர்கள். கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக உங்களது கருத்து அமைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குவைத் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம், பாஜக செய்தித்தொடர்பாளர்களின் கருத்து இந்திய அரசாங்கத்தின் கருத்து கிடையாது என்று விளக்கம் அளித்தது. தங்கள் கட்சியைச் சேர்ந்த இரு செய்தித்தொடர்பாளர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்ததை கத்தார், குவைத் ஆகிய நாடுகள் வரவேற்றன.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது போக்சோ சிறப்பு நீதிமன்றம்

G SaravanaKumar

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

Halley Karthik

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்: சூர்யா நற்பணி மன்றம் அறிக்கை

EZHILARASAN D