பழைய முறைப்படி ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்-முத்தரசன் வலியுறுத்தல்

பழைய முறைப்படி ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட…

பழைய முறைப்படி ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு மற்றும் தீர்மான விளக்க
பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர்
முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

இந்த ஆண்டு மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில்
குறுவை சாகுபடி அதிகரித்திருக்கிறது. அதற்கான இடுபொருட்கள் முறையாக வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உரம் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். நெல்லுக்கான ஊக்கத்தொகையை உரிய காலத்தில் அறிவிக்க வேண்டும்.
ஊராட்சிக்கு ஒரு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் கொள்முதல் செய்யப்பட்ட
நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான கிடங்கு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார் முத்தரசன்.

அக்னிபாத் குறித்த கேள்விக்கு, “பழைய முறைப்படி ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு
செய்ய வேண்டும். ராணுவ தளபதிகளை கொண்டு அக்னிபாத் திட்டத்திற்க்காக
பேட்டிக் கொடுக்க சொல்வது இதுவரை நடைமுறையில் இல்லாதது. மக்களுக்கும்,
ராணுவத்திற்கும் இடையேயான மோதலை மத்திய அரசு உருவாக்குகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக சுயசிந்தனையோடும், புத்தியோடும் செயல்பட்டது. அதிமுக சுயமாக செயல்படவில்லை. யாரோ இயக்குகிறார்கள். இயக்குகிறவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏற்ப அந்த கட்சி இருக்கிறது” என்று பதிலளித்தார் முத்தரசன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.