முக்கியச் செய்திகள் விளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது ரூபி திருச்சி வாரியர்ஸ்

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2 வது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தியது.

டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நெல்லையில் நேற்றிரவு நடைபெற்ற 2வது ஆட்டத்தில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, முதலில் பேட்டிங்கை தொடங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழக்க தொடங்கியது. பந்துவீச்சாளர் சரவணகுமாரிடம் முதல் விக்கெட்டை பறிகொடுத்ததன் மூலம் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அந்த விக்கெட் 2000வது விக்கெட்டாக பதிவானது.

தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த், தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 பந்துகளில் 25 ரன்களை பதிவு செய்தார். திருச்சி அணியின் பந்துவீச்சாளர் அஜய் கிருஷ்ணாவின் நுட்பமான பந்துவீச்சில் அவர் ஆட்டமிழக்க படிப்படியாக திண்டுக்கல் டிராகன் அணி தடுமாற்றத்தை சந்தித்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர்களான அமித் ஷாதிக் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை காட்டத் தொடங்கிய நிலையில் 4வது ஓவரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது.

இரண்டாவது பேட்ஸ்மேன் முரளி விஜய் 13 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய நிதிஸ் ராஜகோபால் மற்றும் ஆதித்யா கணேஷ் ஆகியோர் நிதானமாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 84 பந்துகளில் 114 ரன்களை அணிக்கு பெற்றுக் கொடுத்ததன் விளைவாக 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ரூபி திருச்சி வாரியர்ஸ் வென்றது.

சிறப்பாக பந்துவீசிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அஜய்
கிருஷ்ணாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஆட்டம் நெல்லையில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்குகிறது. இன்றிரவு 7.15 மணிக்கு நடைபெறவுள்ள மற்றொரு ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு காட்டுயிர் வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள்

EZHILARASAN D

மீண்டும் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் TTF வாசன் வெளியிட்டுள்ள வீடியோவால் சர்ச்சை

G SaravanaKumar

மது பார்களை மூடும் வழக்கு: “மேல்முறையிட்டை திரும்ப பெற வலியுறுத்தல்”

Halley Karthik