நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: 6 பேர் உயிரிழப்பு

பீகாரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் தனியாருக்கு சொந்தமான நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கு…

பீகாரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் தனியாருக்கு சொந்தமான நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலை 10 மணியளவில் அங்கு உள்ள கொதிகலன் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் எனவும் கூறப்படுகிறுது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.