முக்கியச் செய்திகள் தமிழகம்

போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு-அரசாணை வெளியீடு

போக்குவரத்துக் கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விடுமுறைகளை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

LPF, CITU, TTSF ஆகிய தொழிற்சங்க பிரதிநிதிகளும் இக்குழுவில் பங்கேற்றிருப்பதாக தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து தொழிற்சங்கத்தினருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று 7 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகத்தில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் அதில் இழுபறி ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று சென்னை குரோம்பேட்டையில்  உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 6வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விடுமுறைகளை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த சூழலில் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?

Web Editor

“சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பட்ஜெட்” – கே.பாலகிருஷ்ணன்

G SaravanaKumar

ராகுல் காந்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? என மத்திய அமைச்சர் கேள்வி

Halley Karthik