முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

விக்ரம் படத்தின் promotion பிக்பாஸ்லையே தொடங்கிடுச்சி-கமல்

விக்ரம் படத்தின் பளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் success meet கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல், இயக்குநர் லோகேஷ், இசையமைப்பாளர் அனிருத், உதயநிதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய உதயநிதி, “படம் வெற்றியடையும்ன்னு நினைச்சோம்.. ஆனா இவ்ளோ பெரிய வெற்றியடையும்னு நினைக்கவே இல்ல. அனிருத்கூட சொன்னாரு இனிமே நாம படத்துக்கு சம்பளம் வாங்காம ஏரியாவோட ரைட்ஸா வாங்கிடனும்னு. விக்ரம் ட்ரெயின்ல ஏறுன கடைசி ஆள் நான் தான்னு படத்தோட பாடல் வெளியீட்டு விழால சொல்லிருந்தேன். மன்னிச்சிடுங்க சார், இது ட்ரெய்ன் இல்ல ராக்கெட்” என்று பேசிமுடித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “லோகி யுனிவர்ஸ்ன்னு கேக்கும்போதே பயமாருக்கு. இதெல்லாம் சார் கொடுத்த இடம்ன்னு தான் சொல்லுவேன். இந்த படத்தோட தயாரிப்பாளர், ஹீரோ மற்றும் என்னோட ideal-ன்னு மூனு விதமா கமல் சார் என் கூட இருந்தாரு. . அவருக்கு நான் சாதாரணமா படம் பண்ணிடமுடியாது. உதயநிதி சொன்னமாதிரி லாக்டவுனுக்கு தான் நன்றி சொல்லனும்.. ஏன்னா எனக்கு எழுத நிறைய டைம் கிடைச்சது. எல்லாத்துக்கும் கமல் சார் கொடுத்த சுதந்திரம் தான் காரணம்.
இதுல மத்த படத்தோட cross over வருது, கதாப்பாத்திரங்கள் வருது. இது ஒரு experiment ஆக இருந்தும் அதை புரிச்சிக்கிட்டு அவரு ஒத்துழைச்சாரு. படம் ரிலீஸ் ஆகி ஹிட்டானதும் எனக்கு போன் பன்னாரு. உன் வேல முடிஞ்சது படம் சூப்பர் ஹிட்டாகிடுச்சி, உடனே office-க்கு போய் அடுத்த படத்துக்கு எழுத ஆரம்பி. break எடுக்காதன்னு சொன்னாரு. அவர் சொன்னமாதிரியே நான் அடுத்த படத்துக்கு move ஆகுறேன் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.” எனப்பேசி முடித்தார்.

இதனைத்தொடர்ந்து கமல் பேசினார், “மேடையில் இருப்பவர்களை நண்பர்கள் என்று சொல்வதா, தம்பிகள் என்று சொல்வதா அல்லது தூண்கள் என்று சொல்வதா என்றே தெரியவில்லை. ஒரு படத்தோட வெற்றிக்கு நான் தான் காரணம் என்று யாருமே சொல்லமுடியாது. எங்கள் ஒவ்வொருவருக்கும் பின்பும் குறைந்தது 10 பேர் இருக்கிறார்கள். ராஜ் கமல் புரொடெக்‌ஷனுக்கு பின்பு மட்டும் 40 பேர் இருக்கிறார்கள். இது கூட்டு முயற்சியால் நிகழ்ந்த வெற்றி. இதையெல்லாம் தாண்டி என்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒரு பிரச்சனை நிகழும். கடந்த 10 வருடங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியான படம் விக்ரம் தான். பிக்பாஸ்க்கு போனப்போ நிறைய விமர்சிச்சாங்க. ஆனா விக்ரம் படத்துக்கான promotion அங்கையே தொடங்கிடுச்சி.

என்னுடைய சீடன்னு லோகேஷ் சொன்னாரு. இனிமே அவரு குருவாக மாறனும். கத்து கொடுக்கறது ஏதோ பெரிய பொறுப்புன்னு நினைக்குறாங்க. கத்துக்கொடுக்கும் போது தான் நாம நிறைய கத்துக்க முடியும். லோகேஷ் அடுத்த படத்துலையும் எதுனா சந்தேகம் அல்லது ஆலோசனை வேணும்னா எங்கிட்ட வரலாம். அதுவும் என் படம் தான். ரெட் ஜெயிண்ட்ஸ்க்கு எவ்ளோ வேலை இருந்தாலும் தொடர்ந்து இந்தமாதிரி நிறைய படங்கள வாங்கி வெளியிடனும். ஆரோக்கியமான விமர்சனங்களையும் வாழ்த்துக்களையும் சொன்ன பத்திரிகையாளர்களுக்கு நன்றி. ஆனா சும்மா கிண்டல் அடிப்பதற்காக வந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லக்கூட நமக்கு நேரம் இல்லை. அனைவரும் நன்றி.. விருந்து சாப்ட்டு போங்க. எங்களுக்கும் பசிக்குது.. நாங்களும் சாப்டபோறோம். ஆரம்பிக்கலாங்களா..” என்று பேசி முடித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”கடவுளை சந்தித்து விட்டேன்”- ஸ்பீல்பெர்கை சந்தித்த பின் ராஜமௌலி நெகிழ்ச்சி

Web Editor

“உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகிறது”- நேட்டோ

Halley Karthik

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

Jeba Arul Robinson