சென்னையில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
சென்னை தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் பஞ்சாப் ஹேண்ட்லூம் என்ற கைத்தறி துணி விற்பனையகம் உள்ளது. இங்கு பஞ்சாபில் இருந்து கைத்தறி துணிகள், கைவினை பொருட்களை, பஞ்சுமெத்தை, பெட்ஷீட் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று இரவு 7.45 மணியளவில் திடீரென முதல் தளத்தில் இருந்து புகை வந்துள்ளது. பற்றி எரியும் டீக்கடையில் பெட்ரோல் எடுத்து ஊற்றும் வடிவேலு போல கடை ஊழியர்கள் புகை வந்த இடத்தில் துணிகளை போட்டு புகையை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் புகையானது தீயாக பரவியது. இதனால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். பின்னர் தீ வேகமாக 2 தளங்களுக்கும் மளமளவென பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து
தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்குள் அருகில் இருந்த கடைக்கும் தீ பரவியது. இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமனது.
விபத்து குறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து காரணமாக தாம்பரம்- வேளச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல ஏற்பட்டுள்ளது.
Advertisement: