பிரேசிலில் நடந்து வரும் செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஜெர்லின் அனிகா சாதனைப் படைத்துள்ளார்.
பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நீளம் தாண்டுதல், நீச்சல், இறகுப்பந்து, உள்ளிட்ட போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஜெயரச்சகன் – லீமா தம்பதியின் மகள் ஜெர்லின் அனிகா (வயது 17). மதுரை அவ்வை மாநகராட்சி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜெர்லின் அனிகா பிறப்பிலிருந்தே செவித்திறன் சவால் உடையவராக இருந்ததால் பெற்றோர்கள் இவரை மிகந்த கவனத்துடன் வளர்த்து வந்தனர். தந்தை பேட்மிட்டன் விளையாடுவதற்காக அழைத்து செல்லும் போது எட்டு வயதில் பேட்மிட்டன் விளையாட்டில் ஜெர்லினுக்கு ஆர்வம் வந்துள்ளது.
இதை கண்ட தந்தை ஜெயரச்சகன் பயிற்சியாளர்களைக் கொண்டு மகளுக்கு கூடுதல் பயிற்சி கொடுக்கத்தொடங்கினார். தொடக்கத்தில் உள்ளூர் விளையாட்டுகளில் பங்கேற்ற ஜெர்லினாவுக்குதோல்விகளும் வெற்றிகளும் மாறிமாறி வந்தது.
அப்போது பயிற்சியாளர் கண்ணன் என்பவர் செவித்திறன் சவால் உடையோருக்கான பேட்மிட்டன் போட்டிகளில் கலந்து கொள்ள வைத்தார். இதையடுத்து ஜெர்லின் அனிகா பங்கேற்கும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகள் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து நேஷனல் பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து 2017 இல் நடைபெற்ற செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஐந்தாவது இடம் பிடித்தார்.
தற்போது 2022 பிரேசில் நாட்டில் நடைபெறும் செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியிடல பங்கேற்று இரட்டையர் பிரிவு, ஒற்றையர் பிரிவு என இரண்டிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை சிங்கப்பெண் ஜெர்லின் அனிகா தாயார் நியூஸ் 7க்கு அளித்த சிறப்பு பேட்டியில், பிறந்து சில நாட்களுக்கு பிறகு மருத்துவரை அணுகும் பொழுது தான் காது கேட்காது என தெரியவந்தது அப்போது உயிரிழப்பு செய்து கொள்ளலாம் என நினைத்தோம். காது கேட்காத பெண்ணே பெற்று விட்டோமே என்று நினைத்து வருத்தப்பட்டோம். ஆனால் அவள் தான் எங்களை யார் என உலகத்திற்கு அடையாளம் காட்டியுள்ளார்.
மேலும் சாதனைகள் படைக்கும் ஜெர்லினுக்கு மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு
உதவிகள் செய்ய வேண்டும் என்று கூறிய அவர், மத்திய, மாநில அரசுகள் முன்வந்து இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்தால், வருங்காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு ஊன்றுகோலாக விளையாட்டுப் போட்டிகள்
அமையும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்தார்.









