அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் டிவில்லியர்ஸ்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ், அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து…

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ், அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, டி-20 லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடிவந்தார். கடந்த சீசனில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இது விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், ‘இது நம்ப முடியாத பயணம். ஆனால், அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துவிட்டேன். மகிழ்ச்சியுடனும் கட்டுக்கடங்காத உற்சகாத்துடனும் இந்த விளையாட்டை விளையாடினேன். இப்போது இந்த 37 வயதில் அந்தச் சுடர் பிரகாசமாக எரியவில்லை. என் குடும்பம், சகோதரர்கள், மனைவி டேனியல், என் குழந்தைகள் செய்த தியாகங்கள் இல்லாமல் எனக்கான எதுவும் சாத்தியமில்லை. என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை உண்மையிலேயே இப்போது முதலிடத்தில் வைக்க இருக்கிறேன்.

நான் பயணித்த அதே பாதையில் என்னுடன் பயணித்த சகவீரர்கள், எதிரணி வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், உதவியாளர்கள், தென்னாப்பிரிக்க மற்றும் இந்தியாவில் நான் ஆடிய அனைத்து இடங்களிலும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் ஆடிய , டைட்டன், தென்னாப்பிரிக்கா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக அல்லது உலகம் முழுவதும் விளையாடி இருந்தாலும் இந்த கிரிக்கெட், கற்பனை செய்ய முடியாத அனுபவங்களையும் வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறது.

https://twitter.com/ABdeVilliers17/status/1461590448879902726?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1461590448879902726%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fsports%2Fcricket%2Fnews%2Fab-de-villiers-retires-from-all-forms-of-cricket%2Farticleshow%2F87796401.cms

அதற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய போது எனக்கு மகிழ்ச்சியான அனுபவங்கள் கிடைத்தன. 11 வருடம் அந்த அணிக்காக விளையாடிவிட்டு அதில் இருந்து விலகுகிறேன். அந்த நிர்வாகம், நண்பர் விராத் கோலி, பயிற்சியாளர்கள், ஊழியர்கள், ஆர்சிபி குடும்பம் அனைவருக்கும் நன்றி. பெங்களூரு அணியுடனான பயணம் மறக்க முடியாதது. நான் எப்போதும் ஆர்சிபிக்காரன் தான். இவ்வாறு டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.