ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டராக உயர்வு!

ஆவின் நிறுவனத்தின் மொத்த பால் கொள்முதல் நேற்று, 31 லட்சம் லிட்டரை தாண்டியதாக பால்வளத்துறை அறிவித்துள்ளது. குஜராத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனமான அமுல், தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து…

ஆவின் நிறுவனத்தின் மொத்த பால் கொள்முதல் நேற்று, 31 லட்சம் லிட்டரை தாண்டியதாக பால்வளத்துறை அறிவித்துள்ளது.

குஜராத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனமான அமுல், தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக விலைக்கு அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்துறை அமைச்சசர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டில் ஆவின் நாள்தோறும் சராசரியாக 30 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 31 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.