ஆவினில் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு ஆவின் பாலில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டது. இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெய் விலை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய விலை உயர்வின் படி, ஒரு லிட்டர் நெய் ரூ.580ல் இருந்து, ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல்,. 5 லிட்டர் நெய், 2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாகவும், 500 மி.லி நெய் 290 ரூபாயில் இருந்து 315 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 200 மி.லி ரூ.130ல் இருந்து 145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு, இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை @BJP4TamilNadu வன்மையாக கண்டிக்கிறது. (1/3)
— K.Annamalai (@annamalai_k) December 16, 2022
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு, இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு ஆவின் ஆரஞ்சு நிற பால் விலையை 12 ரூபாய் உயர்த்தியதன் விளைவாக அதன் விற்பனை சரிந்தது. தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதா திறனற்ற திமுக அரசு?. என தெரிவித்துள்ளார்.