அமலாக்கத்துறை சோதனையை ஆம் ஆத்மி புன்னகையுடன் வரவேற்கும்: அரவிந்த் கெஜ்ரிவால்

அமலாக்கத்துறை சோதனையை ஆம் ஆத்மி புன்னகையுடன் வரவேற்கும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் குமார் ஜெயினை கைது செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை…

அமலாக்கத்துறை சோதனையை ஆம் ஆத்மி புன்னகையுடன் வரவேற்கும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் குமார் ஜெயினை கைது செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக தெரிவித்தார். பஞ்சாப் முதலமைச்சரை போல அமலாக்கத்துறை சோதனையை கண்டு அழமாட்டோம், பயப்படமாட்டோம், சோதனையை வரவேற்போம் என குறிப்பிட்டார்.

மேலும், 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆம் ஆத்மி அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் சாடினார். சத்யேந்தர் ஜெயின் மட்டுமின்றி, தம்முடைய வீட்டிலும், மற்றும் மணீஷ் சிசோடியா, பகவந்த் மான் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்த வந்தால், அதனை புன்னகையுடன் வரவேற்போம் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.