முக்கியச் செய்திகள் இந்தியா

மேற்குவங்கம் அரசு அளித்த அழுத்தம் காரணமாகவே டெல்லியில் நேதாஜி சிலை: மம்தா பானர்ஜி

மேற்குவங்கம் அரசு அளித்த அழுத்தம் காரணமாகவே டெல்லியில் நேதாஜி சிலை நிறுவப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் நேதாஜியின் பிறந்த நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது விழாவில் பேசிய அவர், இந்தியாவில் வங்காளம் இல்லாதிருந்தால், நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்றும், இந்த உண்மையை பற்றி தான் பெருமைப்படுகிறேன் எனவும் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நேதாஜியின் மரணம் குறித்து ஆராய்வோம் எனக்கூறியவர்கள், இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என சாடினார். ஆனால், நேதாஜி தொடர்பான அனைத்து கோப்புகளையும் மேற்குவங்க அரசு வெளியிட்டு வகைப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், குடியரசு தின விழா அணிவகுப்பு அட்டவணையில் இருந்து மேற்குவங்கம் நீக்கப்பட்டதற்கு, அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே டெல்லியில் நேதாஜியின் சிலை நிறுவப்படுவதாக மம்தா கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒற்றைத் தலைமை விவகாரம்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!

Web Editor

அடுத்த ஆனந்த் யார்? கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் தேடல்!

Jayapriya

“காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானது” – பா.சிதம்பரம்

Saravana Kumar