முக்கியச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – ஸ்ரீரங்கத்தில் குவிந்த புதுமணத் தம்பதிகள்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதுமணத்
தம்பதிகள் குவிந்தனர். மஞ்சள் கயிறுகளை மாற்றிக்கொண்டு காவிரி அன்னையை வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கரூர்
பைபாசில் உள்ள அய்யாளம்மன் படித்துறை மற்றும் அண்ணா சிலை உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் ஆயிரக்கணக்கான புதுமனத் தம்பதிகள் மற்றும் சுமங்கலி பெண்கள் ஒன்று கூடி அதிகாலை முதலே வழிபாடு செய்து வருகின்றனர். இயற்கைக்கு,காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக பன்நெடுங்காலமாக தமிழகத்தில் ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்கள் ஒன்று கூடி தேங்காய், பழங்கள், மஞ்சள், குங்குமம், பச்சை அரிசி, காதோலை கருகமணி, நாவல் பழம் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை நதி தேவதைகளுக்கு படைப்பது வழக்கமான நிகழ்வு. அதேபோல் திருமணமான புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டு காவிரி அணையை வணங்குவதோடு புதிய மஞ்சள் கயிறுகளைக் கட்டிக்
கொள்வார்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகக் கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான சுமங்கலி பெண்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் ஒன்று கூடி காவிரித் தாயை வணங்கி வருகின்றனர். பொதுவாக ஆடிப்பெருக்கு அன்று காவிரியில் தண்ணீர் திறப்பு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் இருகரைகளைத் தொட்டு காவிரியில் நீர் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் பக்தர்கள் வழிபாடு:- ஆடி மாதம் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்து வரும் காலத்தில், தமிழ்நாட்டின் ஜீவநதி ஆகிய காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் தண்ணீர் தொட்டபடி பாயும். பழங்காலத்திலிருந்து ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா என்ற பெயரில் காவிரி அன்னைக்கு தமிழர்கள் விழா எடுத்து மகிழ்ந்தனர். இன்று ஆடிப்பெருக்கின் போது காவிரி துலா கட்டத்தில் காவிரி அன்னையை கன்னிப் பெண்ணாக நினைத்து காதோலை, கருகமணி, காப்பரிசி, கண்ணாடி, வளையல், மஞ்சள், குங்குமம் வைத்து காவிரி மண்ணைப் பிடித்து வைத்து அதற்கு தீபமிட்டு வழிபாடு செய்தனர். மஞ்சள் நூலினை கைகள் மற்றும் கழுத்தில் பெண்கள்
கட்டிக் கொண்டனர். புதுமண தம்பதியினர் தாலி பிரித்து கட்டிக் கொள்ளும்
பாரம்பரியமான சடங்கை காவிரி கரையில் மேற்கொண்டனர். காவிரியில் தண்ணீர்
பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த ஆண்டு 18 ஆம் பெருக்கு எனப்படும் ஆடிப்பெருக்கு
திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘போட்டியில தோற்றாலும் மனசுல ஜெயிச்சுட்டீங்க பாஸ்…’ கோலியை புகழும் நெட்டிசன்ஸ்

Halley Karthik

100 நாள் வேலைத்திட்ட ஊதியம் உயர்வு

EZHILARASAN D

பிபின் ராவத் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்

Arivazhagan Chinnasamy