கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிபுரிவதற்கான யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் நெட்(NET) தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இந்த தேர்வின் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.
இந்த நிலையில் வ்ருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி நெட் தேர்வுக்கு 30.09.2023 முதல் 28.10.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் நெட் தேர்வானது 06.12.2023 முதல் 22.12.2023 வரை கணினி வழி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தேர்வை எழுத தகுதியுள்ளவர்கள் https://ugcnet.ntaonline.in/ என்ற இணையதளத்தின் மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டு வரும் டிசம்பர் மாதம் https://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுஜிசி-நெட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை பி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.