தவறான அறுவை சிகிச்சை செய்ததால் பார்வை பாதித்த இளைஞர் மதிவாணனுக்கு, நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை 5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முள்ளிச்செவல் சமாதானபுரத்தைச் சேர்ந்த
இளைஞர் மதிவாணனுக்கு, இடது கண் பாதிப்பு காரணமாக 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம், நெல்லை அகர்வால் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவருக்கு இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வலதுகண்ணிலும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தொடர் சிகிச்சையில் அவருக்கு இரண்டு கண்களிலும் பாதிப்பு ஏற்பட்டதால், வழக்கறிஞர் வினோத் மூலம் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிளாஸ்டோன், பிளஸ்டு தாகூர் ஆகியோர் பாதிக்கப்பட்ட இளைஞர் மதிவாணனுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வழக்கு செலவாக பத்தாயிரம் என மொத்தம் ஐந்து லட்சத்தி பத்தாயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.