குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக அதிகாரிகள் 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தடையை மீறி, குட்கா பொருள்கள் விற்றது தொடர்பான வழக்கில், தமிழக காவல் துறை முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த சிபிஐ மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதன்காரணமாக வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு
விசாரணைக்கு வந்தது. அப்போது, எட்டு பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதியளித்தது தொடர்பான, கடிதத்தை மூடி முத்திரையிட்ட உறையில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.







