முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

பான் இந்தியா ஹீரோக்களை பின்னுக்கு தள்ளிய விஜய்?

பாகுபலி, கே.ஜி.எஃப், புஷ்பா போன்ற தென்னிந்திய படங்களின் இமாலய வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தென்னிந்தியாவில் இருந்து பல பான் இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. தென்னிந்திய நடிகர்கள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகின்றனர். முன்பெல்லாம் ஓடும் நாட்களை வைத்து கொண்டாடப்பட்டு வந்த படங்களின் வெற்றி தற்போது வசூலை வைத்து கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பான் இந்தியா படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலையும் அசால்டாக அள்ளி வருகிறது.

அந்த வகையில் பார்க்கும் போது பாகுபலியில் நடித்த பிரபாஸ், கே.ஜி.எஃப்-இல் நடித்த யாஷ் உள்ளிட்டோர்கள் ஆயிரம் கோடி வசூல் மன்னர்களாக உருவெடுத்துள்ளனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினியை தொடர்ந்து விஜய் தான் வசூல் மன்னனாக பார்க்கப்படுகிறார். ரஜினியை விட விஜய்க்கு கூடதல் சம்பளம் கொடுக்கப்படுவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் உலாவிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மையில் வெளியான விஜயின் பீஸ்ட் திரைப்படம் கடுமையான விமர்சனத்தை சந்தித்ததோடு வசூலில் சுமார் ரகமாகவே இருந்தது. ஆனால் இத்துடன் வெளியான கே.ஜி.எஃப்-2 படமோ இந்தியா முழுவதும் வசூலை வாரிக்குவித்ததோடு தமிழகத்திலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைக்கண்ட விஜய் வெறுப்பாளர்கள் பலரும், ‘இனிமே விஜய் தான் வசூல் மன்னன் என்று உருட்டாதீர்கள்’ எனக்கூறி மீம்ஸ்கள் மூலமாக கலாய்க்கத் தொடங்கினர். இது ஒரு சின்ன சறுக்கல் தான் என்றாலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை சம்பள ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நடிகர் விஜயே தொடர்ந்து முன்னிலை வகித்துக்கொண்டிருக்கிறார் என்பது சினிமா வட்டார தகவல். இருந்தாலும் பிரபாஸ், யாஷ் அளவுக்கு அவர் ஒரு பான் இந்தியா ஸ்டாராகவோ தென்னிந்திய சினிமாவின் முகமாகவோ உருவெடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

இந்நிலையில் தனியார் இணையதளம் ஒன்று டாப் 10 தென்னிந்திய பிரபலங்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில் பாகுபலி பிரபாஸ் இரண்டாவது இடத்திலும், கே,ஜி.எஃப் யஷ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான பீஸ்ட் சரியாக போகாத நிலையிலும் விஜய் இந்த டாப் 10 பிரபல தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலே சர்ச்சைக்கான சரக்குகளை கொண்டுள்ள நிலையில் நடிகர் அஜித்துக்கு இதில் 4வது இடத்தை கொடுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் கோவத்தை கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இணையத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பு ரசிகர்களுமே அந்த இணையதளத்தின் தரவுகள் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பட்டியலில் 5வது இடத்தில் அக்‌ஷய் குமாரும், 6வது இடத்தில் அல்லு அர்ஜுன், 7வது ஜுனியர் NTR, 8வது மகேஷ் பாபு, 9வது ராம் சரண், 10வது சூர்யா என்று அடுத்தடுத்து பல தென்னிந்திய நடிகர்களும் வரிசை படுத்தப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து விஜய் -அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மேற்கண்ட அத்தனை நடிகர்களின் ரசிகர்களுமே சம்பந்தப்பட்ட இணையதளத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

EZHILARASAN D

இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்-முரசொலி தலையங்கம்

Web Editor

மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவர் கைது!

Gayathri Venkatesan