கரூரில் தூங்கி விழுந்து கொண்டே வீட்டுப்பாடம் செய்யும் சுட்டி பையனின்
குறும்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கரூர் மாநகராட்சிக்கு உள்பட்ட வையாபுரி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வசந்த் –
கனிஷ் தம்பதி. இவர்களது மூன்று வயது மகன் லிபின். சிறுவன் லிபின் கரூரில் உள்ள மழலையர் பள்ளியில் யூ.கே.ஜி. பயின்று வருகிறான். சிறுவன் லிபின் செய்யும் குறும்புத்தனங்களை அவனது தாய் கனிஷ் தனது செல்போனில் படம்பிடித்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது, பேஸ்புக்-இல் பதிவேற்றுவதை
வழக்கமாக வைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுவன் லிபின் வீட்டுப் பாடம் செய்ய அவனது தாய்
கனிஷ் கூறியுள்ளார். சிறுவன் வீட்டுப்பாடம் செய்ய மிகவும் சிரமப்பட்டு தூங்கி
விழுந்துள்ளான். அதனை சிறுவனின் தாய் தனது செல்போனில் படம் பிடித்து சமூக
வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், குறும்புத்தனமாகவும் இருக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
-ம.பவித்ரா