முக்கியச் செய்திகள் இந்தியா

வேகமாக பரவி வரும் குரங்கம்மை-வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு

இந்தியாவில் குரங்கம்மை நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

குரங்கம்மை நோய் தொற்று அறிகுறி தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் குரங்கம்மை நோய் தொற்றால் இதுவரை ஒட்டுமொத்தமாக 8 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது குரங்கம்மை நோயை தடுக்க செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • அதாவது குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை முதலில் தனிமைப்படுத்த வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட நபர் அருகில் இருந்தால் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
  • கைகளை சோப்பு தண்ணீர் அல்லது சானிடைசர் வைத்து சுத்தப்படுத்த வேண்டும்.
  • அதே நேரத்தில் குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் துண்டு, பெட்ஷீட் போன்றவற்றை பகிரக்கூடாது.

  • அவர்கள் பயன்படுத்திய உடைகளை குரங்கம்மை நோய் தொற்றால் பாதிக்கப்படாதவர்களில் துணிகளுடன் சேர்த்து சலவை செய்யக்கூடாது.
  • குரங்கம்மை அறிகுறி தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தமட்டில் டெல்லி, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் தான் குரங்கம்மை நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் ஒருவர் இதுவரை குரங்கமை நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்; யார் இந்த லிஸ் டிரஸ்?

G SaravanaKumar

“டாஸ்மாக்கில் கூட்டம் கூடுகிறது, கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் இல்லை: அமைச்சர் வேதனை

EZHILARASAN D

1032 பேரை தோற்கடித்து சட்டப்பேரவைக்குள் நுழைந்தவர் அரசியலுக்கே முழுக்கு

Web Editor