முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குடிநீர்த்  தொட்டியில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை  உயிரிழப்பு 

மழை நீர் தேங்கி இருந்த குடிநீர்த் தொட்டியில்,  விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயதுக் குழந்தை  தவறி விழுந்த உயிரிழப்பு. 
சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம்,பல்லாவரம்,ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் ஐய்யஞ்சேரி பகுதியில் வசித்து வரும் சத்யராஜ் மணிமாலா என்ற தம்பதியினருக்கு  ஒரு மகன் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
 இந்நிலையில் சத்யராஜ் வெல்டிங் வேலைக்குச் சென்றுள்ளார், அவரது மனைவியும் வேலை முடித்துவிட்டுக் களைப்பில் உறங்கியுள்ளார்.
அப்போது அவர்களது வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவர்களது இரண்டு வயது மகள் ஷாலினி திடீரென மாயமாகியுள்ளார். பின்பு மகள் காணாமல் போனதை அறிந்து தேடியதில், அவர்களது வீட்டிற்கு வெளியே குடிநீருக்காகக் கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது அதில் ஷாலினி உடல்  கண்டறியப்பட்டது.
அதனைக் கண்டு கதறி அழுத அவரது தாய் பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஷாலினி உடலைக் கொண்டு சென்றனர். பின்னர் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இருந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமியின் உடல்  தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“காங்கிரஸ் கட்சி பங்கேற்பாளராக இல்லை பார்வையாளராக உள்ளது” – கே.எஸ் அழகிரி

G SaravanaKumar

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Web Editor

கூண்டோடு ராஜினாமா செய்த காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக நிர்வாகிகள்

EZHILARASAN D