சினிமா பட பாணியில் கோவையில் இருந்து டெம்போவில் கடத்திவரப்பட்ட ஆயிரம் கிலோ சந்தனக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளாவில் இருந்து டெம்போவில் சந்தனக்கட்டை கடத்தப்படுவதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போத்தனூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் சென்றுக்கொண்டிருந்த கர்நாடகா பதிவெண்ட கொண்ட டெம்போவை போலீசார் பின் தொடர்ந்தனர். இதை அறிந்த கடத்தல்க்காரர்கள், வாகனத்தை வேகமாக இயக்கி சென்றனர்.
துரத்திச் சென்ற போலீசார், சேலம் அருகே அந்த வாகனத்தை மடக்கி பிடித்து சோதனையிட்டதில், 57 மூட்டைகளில் இருந்த சுமார் 1051 கிலோ எடையுள்ள சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடத்தலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த ஓட்டுநர் மனோஜை கைது செய்தும் விசாரித்து வருகின்றனர்.







