என் மண், என் மக்கள் நடை பயணத்தின் 5வது நாள்! மானாமதுரையில் மண்பானை செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

மானாமதுரையில் 5வது நாள் யாத்திரையின் போது மண்பானை செய்து பார்த்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அத்தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.  என் மண், என் மக்கள் நடை பயணத்தின் 5வது நாளான இன்று சிவகங்கை மாவட்டம்…

மானாமதுரையில் 5வது நாள் யாத்திரையின் போது மண்பானை செய்து பார்த்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அத்தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். 

என் மண், என் மக்கள் நடை பயணத்தின் 5வது நாளான இன்று சிவகங்கை மாவட்டம்
மானாமதுரையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.

நகரின் முக்கிய பகுதிகள் வழியாக நடந்து சென்று பொது மக்களை சந்தித்த அவர் மண்பாண்ட கூட்டுறவு சொசைட்டியில் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து, அவர் மானாமதுரையில் புகழ்பெற்ற கடம் இசைக்கருவியை இசைத்துப்
பார்த்தார். அதேபோல் மண்பாண்ட தொழில் கூடத்தில், அண்ணாமலை மண்பாண்டங்களை செய்து பார்த்தார்.

பின்னர் மக்கள் மத்தியில் அண்ணாமலை திறந்தவேனில் நின்று உரையாற்றியதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதேபோல், மத்தியில் பிரதமர் மோடி 3வது முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை தமிழகம் முழுவதும் நடக்க உள்ளது.

திமுகவினர் யாத்திரை நடத்தினால் ‘என் மகன் என் பேரன்’ என்று சொல்லி இருப்பார்கள். இதை நாம் கடந்த 27 மாதங்களாக பார்த்து கொண்டிருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். டாஸ்மாக் வருமானம் இன்னும் அதிகமாக வேண்டும் என திமுக நினைக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.